கோவையில் இறை நம்பிக்கை மற்றும் அரசியல் தலைவர்களை அவதூறாகப் பேசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: மார்க்சிய கம்யூனிஸ்டு கோரிக்கை!

கோவை: கோவையில் இறை நம்பிக்கை மற்றும் அரசியல் தலைவர்களை அவதூறாகப் பேசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவையில் இறை நம்பிக்கை மற்றும் அரசியல் தலைவர்களை அவதூறாகப் பேசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மதம் சார்ந்த அரசியல் கட்சிகளின் ஊர்வலம் – பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைவர்களை, பிற மத நம்பிக்கைகளை அவதூறாக இழித்தும், பழித்தும் சித்தரித்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் ஒரு பதற்றம் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மதவழிப் பிரச்சாரங்கள் மூலம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மிக மோசமாகவும், எதிர்த்தும் வெறி பேச்சுக்கள் மத மோதல்களை தேர்தல் காலத்தில் உருவாக்கி சட்டமன்ற தேர்தலில் ஆதாயமடைய துடிக்கின்றனர் என்பதையே சமீப நாட்களில் கோவையில் நடைபெறும் அடுத்தடுத்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

மதவாத அமைப்புகளின் இவ்வாறான வெறிப்பேச்சுகள் மூலம் கடந்த காலத்தில் கோவையின் அமைதி சீர்குலைக்கப்பட்டு மாவட்டத்தின் தொழில் அமைதி கெட்டு, பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டதை கோவை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.

மதவெறி அமைப்புகளின் சுய நலத்துக்காக 25 ஆண்டுகள் கோவை மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள நிலையில் மேலும் கோவை மாவட்டத்தை சமூக பதற்றம் நிறைந்த மாவட்டமாக மதம் சார்ந்த அரசியல் நடத்தும் இயக்கங்கள் துடித்துக்கொண்டு இருப்பதை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனநாயக இயக்கங்கள் அறவழியில் நடத்தும் போராட்டங்களுக்கு பல்வேறு தடைகளை விதித்து வழக்கு பதிவு செய்தும், கைது செய்தும் தனது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் துடிக்கும் காவல்துறை, மறுபுறம் மத அடிப்படைவாத அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு அனுமதி அளிப்பது மட்டுமல்லாமல் மென்மையாக நடந்து கொள்ளும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவையின் அமைதி தொடர்ந்து பாதுகாக்கப்பட மதவெறி அமைப்புகளை தனிமைப்படுத்தப்பட வேண்டும். அரசியல் லாபத்துக்காக மதவாத அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட, மாநகர காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதுடன் மீறி போராட்டத்தைத் தூண்டுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதமோதலை உருவாக்கும்வகையில் மற்ற மதத்தவரின் இறை நம்பிக்கைகளை அவதூறாக பேசியவர்களையும், அரசியல் தலைவர்களை அவதூறாக சித்தரித்து பேசியவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாவட்ட ஆட்சியருடன் இப்பிரச்சினையில் தலையிட்டு கோவையின் அமைதி, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் வலியுறுத்துகின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...