கோவையில் லஞ்சம் வாங்கிய காவல் துணை ஆய்வாளர் உட்பட இருவர் கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவரிடம் வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் கேட்ட துணை காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் என இருவரை இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவரிடம் வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் கேட்ட துணை காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் என இருவரை இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.



தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30), இவர் சூலூர் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்கள் முன் இவர் அங்குள்ள பைபாஸ் ரோட்டில் பைக் ஓட்டி சென்ற போது, இவரை சூலூர் போக்குவரத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மருதையா பாண்டியன் (வயது 56), மற்றும் சக்திவேல் (வயது 27), என்ற காவலர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, இவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, முருகனின் பைக்கை பறிமுதல் செய்து அங்குள்ள ஸ்டாண்டில் நிறுத்திய காவலர்கள், இது தொடர்பாக வழக்கு போடாமல் இருக்க ரூ 12 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

திகைத்து போன முருகன், என்னால் அவளோ பணம் தர முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு, அந்த காவலர்கள் பணத்துடன் வந்தால் தான், பைக்கை தருவோம் என்று கூறி அவரை அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து, முருகன் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து விசாரித்த, டி.எஸ்,பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், விஜயலட்சுமி, சசி லேகா, ஆகியோர் பெயிண்டர் முருகனிடம் இன்று மதியம் ரசாயனம் தடவிய 6 ஆயிரம் ரூபாயை கொடுத்தனுப்பி மறைந்து நின்று கவனித்து வந்தனர்.

அப்போது, அந்த பணத்தை முருகனிடம் வாங்கிய, காவலர் சக்திவேல் அதை எஸ்.ஐ மருதையா பாண்டியனிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர்.

இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மருதையா பாண்டியன் மற்றும் சக்திவேலை, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

இவர்கள், இருவரும் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...