கோவை: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக, சந்தேகத்தின் பேரில் கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரை கேரளா போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை முதல், கேரளா அதிரடிப்படையினர் கோவையில் மூவரின் வீடுகளில் திடீரென சோதனை மேற்கொண்டதில், பல் மருத்துவர் ஒருவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய அவர் கைது செய்யப்பட்டு கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை, சிறப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரது வீடு, சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது வீடு மற்றும் இடையர்பாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனை ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், இடையர்பாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சோதனை செய்த கேரளா போலீசார் அங்கு வைத்து பல் மருத்துவர் தினேஷை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, கேரளா போலீசார் பல் மருத்துவரான தினேஷை கேரள மாநிலம் மலப்புரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், பல் மருத்துவர் தினேஷிடம் விசாரணை நடத்தினால் தான் அவருக்கு மாவோயிஸ்டுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிய வரும், என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.