ஜெர்மன் உதவியுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் திட்டம்: முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்தார்!

கோவை: ஜெர்மன் உதவியுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


கோவை: ஜெர்மன் உதவியுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஜெர்மன்‌ நிதி திட்டத்தின்கீழ்‌ ரூ.108.16 கோடி மதிப்பீட்டில்‌ கோவை மாநகராட்சியுடன்‌ புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம்‌, வடவள்ளி மற்றும்‌ வீரகேரளம்‌ ஆகிய பகுதிகளுக்கான குடிநீர்‌ அபிவிருத்தி திட்டத்தைதமிழ்நாடு முதலமைச்சர்‌ எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில்‌ காணொலிக்காட்சி மூலம்‌ திறந்து வைத்தார்.

ஜெர்மன்‌ நிதி திட்டத்தின்கீழ்‌ ரூ.108.16 கோடி மதிப்பீட்டில்‌ கோவை மாநகராட்சியுடன்‌ புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம்‌, வடவள்ளி மற்றும்‌ வீரகேரளம்‌ ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சாஎடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில்‌ இன்று காணொலிக்காட்சி மூலம்‌ திறந்து வைத்தார். அப்போது நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி உடனிருந்தார்.

தமிழக முதல்வர்தலைமைச்‌ செயலகத்தில்‌ குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை காணொலி காட்சி மூலம்‌ திறந்து வைத்த பின்னா்‌, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ கவுண்டம்பாளையத்தில்‌ உள்ள கவுண்டம்பாளையம்‌, வடவள்ளி மற்றும்‌ வீரகேரளம்‌ ஆகிய பகுதிகளுக்கான குடிநீர்‌ அபிவிருத்திக்கான நீர் உந்து நிலைய மின்‌ அறையில்‌ குடிநீர் அபிவிருத்தி செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ நேரில்‌ பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகரப்பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய ஆலோசகா்‌ சம்பத்குமார்‌, மாநகர செயற்பொறியாளர்‌ (ஸ்மாட் சிட்டி) சரவணக்குமார்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய தலைமை பொறியாளா்‌ ரவீந்திரன்‌, கண்காணிப்பு பொறியாளா்‌ ரகுபதி, நிர்வாகப் பொறியாளர்‌ விவேகனந்தன்‌, உதவி நிர்வாகப் பொறியாளர்‌ விஜயலட்சுமி, மாநகராட்சி அலுவலா்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனா்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியுடன்‌ புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம்‌, வடவள்ளி, வீரகேரளம்‌ ஆகிய 3 பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்‌ மூலம்‌ ரூ.108.16 கோடி வழங்கப்பட்டூள்ளது.

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.108.16 கோடி நிதியானது, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழ்நாடு நகா்புற வளர்ச்சி நிதி மூலம் ரூ.61.80 கோடி கடனாகவும்‌, ரூ.30.90 கோடி தமிழ்நாடு அரசு மானியமாகவும்‌ மற்றும்‌ கோவை மாநகராட்சி பங்களிப்புத்‌ தொகையாக ரூ.15.46 கோடியும் ஒதுக்கப்பட்டு திட்டம்‌ நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்பணிகள்‌ 30.09.2016 அன்று துவங்கப்பட்டு, தற்போது 100 சதவீதம்முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ இப்பகுதியில்‌ உள்ள பொதுமக்களுக்கு நாள்‌ ஒன்றுக்கு நபர்‌ ஒன்றுக்கு 135 லிட்டர்‌ குடிநீர்‌ வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...