கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை! மரண வாக்குமூல வீடியோவில் மகப்பேறு மருத்துவமனை பணியாளர்கள் மீது புகார்!

கோவை: கோவையில் நேற்று மாலை செல்போன் மூலம் மரண வாக்குமூலத்தை பதிவு செய்து உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பி விட்டு, அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய மாநகராட்சி துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



கோவை: கோவையில் நேற்று மாலை செல்போன் மூலம் மரண வாக்குமூலத்தை பதிவு செய்து உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பி விட்டு, அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய மாநகராட்சி துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவையில் நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் வருமாறு:- கோவை குனியமுத்தூர் பி. கே. புதூர் மதுரைவீரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 38). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான சீதாலட்சுமி அரசு மகப்பேறு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மதியம் இவர் தனது செல்போன் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த மரண வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிந்தேன். அங்கு பணி செய்யும் சாலமன் என்பவரும் கணினி ஆபரேட்டரான ரேவதி என்ற பெண்ணும் தனி அறையில் தவறாக நடந்து கொண்டிருந்தனர். அதை நான் எதிர்பாராதவிதமாக பார்த்துவிட்டேன்.

இதைத்தொடர்ந்து அங்கு பணி செய்யும் செவிலியர் லதா உள்பட அவர்கள் 3 பேரும் ஒன்றாகச் சேர்ந்து என்னைப்பற்றி தலைமை மருத்துவரிடம் பொய்யான தகவல்களைக் கூறினார்கள். நான் பெண்களை வீடியோ எடுத்ததாகவும், நான் மிகவும் மோசமானவன் போலவும் என்னைச் சித்தரித்து என்னை பணி செய்ய விடாமல் தடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வேலைக்குச் சென்றபோது என்னை நாளேடு நோட்டில் கையெழுத்து போட அனுமதிக்காமல் வேலையை விட்டு போகச் சொன்னார்கள். அவர்கள் செய்த தவறை நான் எதிர்பாராதவிதமாக பார்த்ததால் அவர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வேலையை விட்டு போகச் சொன்னதால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இதையடுத்து நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளேன். எனக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என் சாவுக்குக் காரணமான சாலமன், ரேவதி, லதா ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியிருந்தார்.



இந்நிலையில் இன்று ரெங்கசாமியின் மகள் ரம்யா குடும்பத்துடன் சென்று கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், என் அப்பா இறப்பதற்கு முன்பாக வீடியோ பதிவு செய்துவிட்டு இறந்துள்ளார். அவர் கூறிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...