கோவை: கோவையில் முகமது நபிகள் குறித்து மீண்டும் இழிவாக பேசிய, இந்து முன்னணி நிர்வாகி மீது காவல் துறையினர் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் முகமது நபிகள் குறித்து மீண்டும் இழிவாக பேசிய, இந்து முன்னணி நிர்வாகி மீது காவல் துறையினர் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே, இந்து முன்னணி நிர்வாகி, ஜெய்சங்கர் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில், இஸ்லாமிய தூதர் நபிகள் குறித்து அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மற்றும் இந்து முன்னணியினரை விடுவிக்க கோரியும், தொடர்ந்து இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக கூறி ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய ஜெய்சங்கர், பிரதமர் மோடியை பற்றி தரைகுறைவாக பேசி வருவதை கண்டிப்பதாக கூறி, மீண்டும் நபிகள் பற்றி இழிவாக பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள ஜெய்சங்கர்ரை போலீசார் தேடி வருகின்றனர், என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதைக் கண்டித்தும் கல்யாண ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மீண்டும் மற்றொரு இந்து முன்னணி நிர்வாகியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.