வால்பாறை: வால்பாறை நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் 3 பேரை அக்கட்சியிலிருந்து நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தொகுதியைச் சேர்ந்த மா.கார்த்திகேயன், அ.மேத்யூ மற்றும் அ.அப்துல்வாஹித் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் அவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.