கோவை: பா.ஜ.க. - இஸ்லாமியர் இடையே போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மதநல்லிணக்க கூட்டத்தை நடத்தி கோவை மாவட்டத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டுமென்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவையில் இருதரப்பு பிரச்சினைக்குத் தீர்வுகாண மத நல்லிணக்கக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ. ஊர்வலத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. கூட்டம் நடத்தியது. அப்போது நபிகள் நாயகம் குறித்து அக் கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.
மோடி குறித்து அவதூறாக பேசிய இஸ்லாமிய அமைப்பினரைக் கண்டித்து பா.ஜ.க.வினரும், நபிகள் நாயகம் குறித்து பேசியதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பினரும் கடந்த 3 நாட்களாக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் பா.ஜ.க. சார்பில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்த இஸ்லாமிய அமைப்புகள்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டம் நடத்தி வருவதால் பதட்டமான சூழல் உருவாகிறது. போலீஸ் பாதுகாப்பு அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண இருதரப்பினரையும் அழைத்து மத நல்லிணக்கக் கூட்டம் நடத்தி சமரசம் ஏற்படுத்த வேண்டும் என்று நகரின் அமைதியான வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.