கோவை: பட்டப்பகலில் செல்போன் பேசிக்கொண்டு செல்வோரிடம் துணிகரமாக செல்போன் பறித்து செல்லும் சம்பவம் கோவையில் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: பட்டப்பகலில் செல்போன் பேசிக்கொண்டு செல்வோரிடம் துணிகரமாக செல்போன் பறித்து செல்லும் சம்பவம் கோவையில் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் சமீப காலமாக மொபைல் போன் திருட்டு அதிகரித்து வருகிறது. போலீஸ்காரர் ஒருவரிடம்கூட மொபைல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. குடி மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர்களே அதிகஅளவில் மொபைல் போன் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் உமா கூறுகையில், இளம் பருவத்தினரே மொபைல் போன் திருட்டில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து ரோந்துப்பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.