கோவையில் டெங்கு காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் நான்கு பேர் அனுமதி.
கோவை: கோவையில்டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு நான்கு பேர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று, இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அங்கு தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.