நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு: கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை கோரி தமுமுக சார்பில் மனு!

கோவை: கோவையில் சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுத்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசிய பாஜக கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை கோரி காவல் ஆணையாளரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுத்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசிய பாஜக கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை கோரி காவல் ஆணையாளரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-

கடந்த 31.01.2021 அன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உலக இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதக்கூடிய நபிகள் நாயகத்தை மிக தரக்குறைவாக விமர்சித்து இஸ்லாமியர்கள் மனது புண்படும்படி பேசியுள்ளார்.

இதுபோன்ற வன்ம பேச்சுக்களை இவர் தொடர்ந்து பேசுவதால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகிறது. ஆகவே, இதுபோல் யாரும் பேசாமல் இருக்க வேண்டும் என்றால் இவ்வாறு பேசிய கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...