கோவை: கோவையில் பண்டிகை காலங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட சமயங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிக்க அதிகத்திறன் வாய்ந்த Drone Camera ஒன்றினை PSG மற்றும் GRG கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், இ.கா.ப அவர்களிடம் இன்று வழங்கினர்.
கோவை: கோவையில் பண்டிகை காலங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட சமயங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிக்க, அதிகத்திறன் வாய்ந்த Drone Camera ஒன்றினை PSG மற்றும் GRG கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், இ.கா.ப அவர்களிடம் இன்று வழங்கினர்.
கோவை மாநகர காவல் சரகத்தில் நடைபெறும் தேர் திருவிழாக்கள், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு அதிகப்படியாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கடைவீதி பகுதிகள் மற்றும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சமயங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் உதவும் வகையில் "Drone Camera" பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில், PSG கல்வி நிறுவனங்களில் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் GRG கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் அதிகத்திறன் வாய்ந்த Drone Camera ஒன்றினை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், இ.கா.ப அவர்களிடம் இன்று (03.02.2021) வழங்கினர்.
இந்த அதித்திறன் வாய்ந்த Drone Camera இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் (Night Vision) கேமரா பொருத்தப்பட்டும் மற்றும் நான்கு கிலோமீட்டர் தொலைவு வரை சென்று படம் பிடிக்கக் கூடிய தொழில்நுட்பம் கொண்டதாகும். இதன் மூலம் முக்கியமான போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் தேர் திருவிழா காலங்களிலும் மற்றும் பண்டிகை காலங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் ஏதுவாக இருக்கும் என காவல் ஆணையர் சுமித் சரண், இ.கா.ப அவர்கள் தெரிவித்தார்.