இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் ஒரு சவரன் தங்கம் ரூ 1,080 குறைந்தது!

கோவை: தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைக்கப்பட்டுள்ளது.


கோவை: தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை நகரமான கோயம்புத்தூர் தங்க நகை உற்பத்திக்கும் பெயர் பெற்றது. கோவையைப் பொறுத்தவரை தங்க நகை உற்பத்தி தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தங்கத்தின் விலை அசாதாரண விலை உயர்வைக் கண்டது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,000 (8 கிராம் தங்கம்) ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின்விலை தொடர்ந்து ரூ.39,000, ரூ.38,000 என இருந்தது. உலகெங்கும் தங்கத்தின்மீது அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டதுடன் அதிகமாக இறக்குமதி வரி விதிக்கப்பட்டது, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் போன்றவையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைத்துள்ளதையடுத்து தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர் தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-

முன்பு தங்கத்துக்கு 12.5 சதவீதஇறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, இது இறக்குமதி வரியை 10.75 சதவீதமாக குறைத்துள்ளது. இதுதவிரஉலகச் சந்தையிலும் தங்கத்தின் விலை 25 டாலர்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களால் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது.

வரி விகிதங்களைக் குறைத்து அறிவித்த மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த வரி குறைப்பு போதாது. தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்தியா முழுவதும் 5 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர், கோயம்புத்தூரில் மட்டும் 1 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

தங்க நகைத் தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 6 சதவீதமாகவும், தங்கத்துக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 3 சதவீதம் முதல் 1.5 சதவீதமாகவும் குறைக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் சந்தையில் ஒரு சவரன் தங்கத்தின் (8 கிராம்) விலை நிலவரம் வருமாறு:-

ஜனவரி 28 -ந்தேதி ரூ.37,680

ஜனவரி 29-ந்தேதி ரூ.37,640

பிப்ரவரி 1-ந்தேதி ரூ.38,008

பிப்ரவரி 2-ந்தேதி ரூ.37,960

பிப்ரவரி 3 (இன்று) - ரூ.36,880

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...