கோவை சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகர் பெயரை மீண்டும் நல்லூர் வயல் என மாற்றக்கோரி போராட்டம்..!

கோவை: கோவை சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகரின் பெயரை மீண்டும் நல்லூர் வயல் என மாற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட நல்லூர் வயல் குழுவினர் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகரின் பெயரை மீண்டும் நல்லூர் வயல் என மாற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட நல்லூர் வயல் குழுவினர் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் காருண்யா பல்கலைகழகம் அருகேயுள்ள பகுதி காருண்யா நகர் என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக அந்தப் பகுதி நல்லூர் வயல் என இருந்ததாகவும், அரசு கெசட்டிலும் நல்லூர் வயல் என உள்ள நிலையில் காருண்யா நகர் என மாற்றப்பட்ட கிராமத்தின் பெயரை மீண்டும் நல்லூர் வயல் என மாற்றக்கோரி நல்லூர் வயல் மீட்புக்குழுவினர் சிறுவாணி சாலை ஆலாந்துறையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.



பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால், ஆலாந்துறை சிறுவாணி சாலையில் சுமார் 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் அங்கு லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து பேரணியாக சென்ற சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



அப்போது அவர்கள் அரசு கெசட்டில் உள்ளதுபோல மீண்டும் நல்லூர் வயல் என பெயர் வைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் தொடர்ந்து தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...