கோவை சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

கோவை: கோவையில் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரபட்டி ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரபட்டி ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் பெரும்பாலானோர் கால்நடை, கோழிப்பண்ணை, தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 வருடங்களாக பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட டயனமைட் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலைகள் இயங்கி வந்தன.

இதனிடையே, அந்த நிறுவனம் மூடப்பட உள்ள நிலையில், வாரபட்டி ஊராட்சி பகுதியில் 421 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்துள்ளது.



இந்த நிலையில், சிப்காட் தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜன் கூறுகையில், சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் பட்சத்தில் அங்கு சாயத் தொழில், தோல் தொழிற்சாலை, இரும்பு உருக்காலை அமையும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்வதால் சிப்காட் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

இதனிடையே, இன்று காலை வாரபட்டி கிராமத்துக்கு சென்ற தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனருமான வ.கவுதமனை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாரபட்டி செல்ல அவர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...