கோவை: கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், டிரைவர் சம்பவ இடத்திலலேயே பலியானார். மற்றொரு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- இன்று மதியம் கருமத்தம்பட்டி அவினாசி நெடுஞ்சாலையில் பழுதாகி ஒரு கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. அந்த லாரியின் டிரைவர் கிறிஸ்டோபர் ஜெபராஜ், லாரியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட கிறிஸ்டோபர் ஜெபராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்குப் போராடிய மற்றொரு டிரைவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து 304 Aபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.