கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு வருகிற 17-ம் தேதி வரை காவலை நீட்டித்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் அருளானந்தம், பைக் பாபு, ஹாரன் பால், உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்து, கோவை அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இன்றோடு அவர்களுடைய நீதிமன்ற காவல் முடிவடைவதால் பாதுகாப்பு கருதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக போலீசார் அவர்களை நீதிபதி பார்வைக்கு ஆஜர்படுத்தினர்.
பின்னர், நீதிபதி வருகிற 17-ஆம் தேதி வரை 3 பேருக்கும் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.