கோவை சூலூர் சிப்காட் விவகாரம்: போராடும் மக்களை பார்க்க வந்த இயக்குனர் கௌதமன் போலீசாரால் தடுத்து நிறுத்தம்..!

கோவை: சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை, அருகில் வாரப்பட்டி, சங்கராபுரம் பகுதியில் 421 ஏக்கரில் சிப்காட் தொழில் மையம் அமைய உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்வூர் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோவை: சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை, அருகில் வாரப்பட்டி, சங்கராபுரம் பகுதியில் 421 ஏக்கரில் சிப்காட் தொழில் மையம் அமைய உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்வூர் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த தகவலை அறிந்த தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கௌதமன் இன்று அந்தப் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களைச் சந்திப்பதற்காக வந்தார். அப்போது, கௌதமன் வரும் தகவல் அறிந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.



பின்னர், 3 கிலோ மீட்டர் தொலைவிலேயே அவருடைய கார் தடுத்து நிறுத்தப்பட்டு, அப்பகுதி மக்களைச் சென்று பார்க்க அனுமதி கிடையாது, என காவல்துறையினர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.



அதனால், போலீசாருக்கும் அவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கௌதமன் கூறியதாவது: தமிழகத்தின் மண்ணையும், இயற்கை வளத்தையும் தாரைவார்க்க கூடிய எந்த செயலாக இருந்தாலும், தமிழ் பேரரசு கட்சி வன்மையாக கண்டிக்கும். இன்று நான் போராட்டக் களத்தில் உள்ள அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்காக வந்தேன். ஆளுங் கட்சி சார்பாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு என்னை தடுத்து நிறுத்தினர். நான் மக்களை சந்தித்து விட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தேன்.

எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையே சட்டத்தை மீறலாமா? என கேள்வி எழுப்பினேன். அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி என் அலுவலகத்திற்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என செல்போன் மூலமாக என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதனை தொடர்ந்து, நான் அவரைப் பார்க்க போலீசாருடன் சென்றேன். என்னை அங்கு வைத்து கைது செய்யப் போகிறார்களா? இல்லை விசாரணை செய்துவிட்டு அனுப்பப் போகிறார்களா?! என்பது தெரியாது.

என்ன நடந்தாலும் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் இந்த கௌதமன் தொடர்ந்து போராடுவான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறி சென்றார்.

பிறகு, டி.எஸ்.பி உடன் பேச்சுவார்த்தை முடிந்து போலீஸ் பாதுகாப்போடு அந்த போராட்ட களத்தில் உள்ள மக்களை சந்தித்த பின்பு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்து விட்டு, கெளதமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதால், அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...