கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு போராட்டம்.
கோவை: ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்,போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழிற்சங்கங்கள், இன்றுன்மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, கோவையில் நஞ்சப்பா ரோட்டில் உள்ள யுனைட்டெட் இன்சூரன்ஸ் அலுவலக வளாகத்தில் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழிற்சங்கங்கள் சார்பில் 1 மணி நேரம் வெளிநடப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. உள்பட பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டனர்.