பொள்ளாச்சி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் பா.ஜ.க.வின் ஒத்துழைப்பு நேரடியாக இல்லை. அரசியலமைப்பு சட்டப்படி கவர்னரே முடிவெடுப்பார் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் பா.ஜ.க. அலுவலக கட்டிட திறப்பு விழா மற்றும் தென்னைநார் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு, தென்னை நார் உற்பத்தியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒருபுறமும், மறுபுறம் மாநில அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுப்பார். இதில் பாஜகவின் ஒத்துழைப்பு என்பது நேரடியாக இல்லை,10 பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில், அங்கம் வகித்த போது தமிழகத்திற்கு கிடைத்த நிதியைவிட பல மடங்கு அதிகமாக தற்போது மத்திய பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் எய்ம்ஸ்மருத்துவமனை வரவில்லை, தற்போது தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளைமோடி அரசு கொண்டு வந்துள்ளது. அதிக எண்ணிக்கையில்ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 10 ஆண்டுகள் காங்கிரசுடன் அங்கம் வகித்தபோது தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஸ்டாலின்படித்துவிட்டு பட்ஜெட்மீதுவிமர்சனம் செய்ய வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டிய பணி என்பதால், கால தாமதமாகி வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு கூறிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்வகையில் மத்திய பட்ஜெட் உள்ளதாகவும், பட்ஜெட் அனைத்து துறைகளுக்கும் ஊக்கமளிக்கும்வகையில் உள்ளதாகவும், சுய சார்பு பாரதம் என்ற நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.