கோவையில், மின் இணைப்புக்காக இடைத்தரகர் லஞ்சம் கேட்ட ஆடியோ: சமூகவலைத்தளங்களில் பரவியது!

கோவை: கோவையில், மின் இணைப்புக்காக இடைத்தரகர் லஞ்சம் கேட்ட ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில், மின் இணைப்புக்காக இடைத்தரகர் லஞ்சம் கேட்ட ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை ஒண்டிப்புதூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா், தனது கட்டடத்துக்கு வா்த்தக மின் இணைப்பு பெறுவதற்காக மின் உரிம ஒப்பந்ததாரரை அணுகியுள்ளார். அவா் ஆவணங்களை இணையம் மூலமாகப் பதிவு செய்து ரூ. 4,500 கட்டணம் பெற்றுள்ளார். பின்னா், அப்பகுதியைச் சோ்ந்த உதவி மின் பொறியாளா் கட்டடத்தை நேரில் பார்வையிட்டுச் சென்றார். ஆனால், அதன்பிறகு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மின் இணைப்பு வழங்க உதவி மின்பொறியாளருக்கு ரூ.2 ஆயிரம் தர வேண்டுமென ஒப்பந்தததாரா் கூறியுள்ளார். அதன்படி, தொழிலாளி பணம் கொடுத்துள்ளார். ஆனால், அதன்பிறகும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, உதவி மின்பொறியாளரை சந்தித்து மின் இணைப்பு வழங்குமாறு தொழிலாளி வலியுறுத்தியுள்ளார். அப்போது இடைத்தரகா் ஒருவரை சந்தித்து பேசுமாறு உதவி மின் பொறியாளா் கூறியுள்ளார். அதன்படி இடைத்தரகருடன் பேசிய அந்த தொழிலாளி உதவி மின் பொறியாளருக்கு ரூ.20 ஆயிரமும், லைன் மேன், போர்மேன்களுக்குத் தனியாகவும் பணம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என அவா் தெரிவித்தாராம்.

இடைத்தரகா் லஞ்சம் கேட்டு பேரம் பேசியதை சம்பந்தப்பட்ட தொழிலாளி தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் அவரது நண்பா்கள் மற்றும் சமூக ஆா்வலா்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த ஆடியோ பதிவு கோவையில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரம் மின்வாரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரி மற்றும் அலுவலா்கள்மீது விரைவில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின் வாரிய உயரதிகாரி ஒருவா் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...