கோவை: கோவையில், 24 வயது போலீஸ்காரர் ரத்தக்கொதிப்பால் மயங்கி விழுந்து இறந்தார்.

மதுரை மாவட்டம், சேடப்பட்டி தாலுகா பெருங்காமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 24). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் பி.ஆர்.எஸ் 23 -ஆவது ஸ்குவாட் பயிற்சி முடித்தார். இதையடுத்து தங்கதுரை தற்போது கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 1.9. 2019 முதல் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 6.1.2021 அன்று காலை வழக்கம்போல பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம் அருகே வரும் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது டாக்டர்கள் அவருக்கு அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பால் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து காவலர் தங்கராஜை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது இடது கை மற்றும் கால் செயலிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை கேள்விப்பட்டதும் செல்வபுரம் போலீசார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.