கோவை: கோவையில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த இரு தினங்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள முடியாமல் விடுபட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று ஒரே நாளில் நகர்ப்பகுதிகளில் 2,558, கிராமப்புறங்களில் 1,243 என மொத்தம் 3,801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.