கோவையில், மரத்தில் ஏறி தேன் எடுக்க முயன்றவர் கீழே விழுந்து சாவு!

கோவை: மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்துவிட்டு தேன் எடுக்க முயன்றவர் கீழே விழுந்து இறந்தார்.


கோவை: மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்துவிட்டு தேன் எடுக்க முயன்றவர் கீழே விழுந்து இறந்தார்.

கோவை தொண்டாமுத்தூர் புதுப்பாளையத்தை அடுத்த மல்லிகை நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். முருகேசன் நேற்று புதுப்பாளையத்தில் மரத்தில் உள்ள தேன் கூட்டை அழித்து அதிலிருந்த தேனை எடுக்க தனது நண்பருடன் சென்றுள்ளார்.

மரத்தின் மீது ஏறிய அவர் தேன்கூட்டை அழித்துக் கொண்டிருக்கும்போது கை தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...