பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை வருவாய்த்துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆனைமலை அருகே உள்ள பெரியபோது வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை வட்ட வழங்கல் அலுவலர் முருகராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர் செல்லதுரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் அங்கு வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் டிரைவர் அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அந்த வாகனத்தில் நடத்திய சோதனையில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் மூன்று டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.