கோவையில், சாலை சீரமைக்க வலியுறுத்தி கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை காந்திமாநகர் மத்திய உணவுக் கிடங்கு அருகே சாலை சீரமைக்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை காந்திமாநகர் மத்திய உணவுக் கிடங்கு அருகே சாலை சீரமைக்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி 40-வது வட்டம், ஸ்ரீராம் நகர் இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு சாலையில் இருந்து சக்தி சாலை வரை உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி உணவு தானிய சேமிப்பு கிடங்கு அருகே கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையிலும், தி.மு.க. பகுதி பொறுப்பாளர் நாகராஜ், வார்டு செயலாளர் மகேஷ்குமார் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தின்போது, சாலையை சீரமைக்க வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த பத்தாண்டு காலத்துக்கும் மேலாக இந்த சாலை பழுதடைந்து நடந்து செல்ல முடியாத அளவுக்கு இருந்தது. இதைப்போலவே வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் பயன்படுத்த முடியாத பயனற்றதாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்போதெல்லாம், இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 2016-ல் இருந்து 2020-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளாக தொடர்ந்து நான் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கானகடிதங்களை கொடுத்திருக்கிறேன்.

கேள்வி நேரத்தின்போது பேசுவதற்காக கவனத்தில் கொண்டு வந்த அதே நேரத்தில், மாவட்ட ஆட்சித் தலைவரை 10-க்கும் மேற்பட்ட முறை நேரடியாக சந்தித்து கடிதம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கின்றேன்.

மாநகராட்சி ஆணையாளரிடமும் இதுகுறித்து கடிதம் கொடுத்திருக்கிறேன். 50-க்கும் அதிகமான முறை புகார் மனு கொடுத்தபோதும்மாநகராட்சி நிர்வாகமும் அதைப்போலவே மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



காவல்துறையின் அனுமதியை மீறி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, பகுதி பொறுப்பாளர் நாகராஜ், வார்டு செயலாளர் மகேஷ்குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, வழக்கறிஞர் ஜி.டி.ராஜேந்திரன்,வே.நா.உதயகுமார், முரா.செல்வராஜ், கோட்டை அப்பாஸ், வெங்கடேஷ், கமல் மனோகரன், மனோகரன், கண்ணன், ஆனந்த், ஜி.டி.ரமேஷ், உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார், பகுதி பொறுப்பாளர்கள்மார்க்கெட் மனோகரன், பாலசுப்பிரமணியம், அக்ரி பாலு, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ஆர்.மோகன்குமார், கணபதி சம்பத்குமார், தினேஷ் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...