கோவை: கோவையில், ரத்தக்காயத்துடன் சுற்றித்திரிந்த போதை ஆசாமியால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கோவையில் லங்கா கார்னர் பகுதியில் இன்று மதியம் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. உடல் முழுவதும் ரத்தம் வழிந்தநிலையில் அந்த நபர் சுற்றிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
ரத்தக்காயத்துடன் சுற்றித்திரிந்த அவரை மருத்துவமனைக்கு செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தினர். ஆனால், அவரோ போலீசார் வந்தால்தான் மருத்துவமனை செல்வேன் என்று அடம்பிடித்தார். இதனால் அவருக்கு மேலும் ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை சமாதானம் செய்த சிலர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.