கோவை: கோவையில், ஓடும் பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேல். இவர் தனியார் மருத்துவமனையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தனிகா (வயது 28) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது தங்கை மற்றும் உறவினருடன் மயிலாடுதுறை புறப்பட்டார்.
காந்திபுரத்தில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ் நீலாம்பூர் அருகே சென்றபோது தனிகாவுக்கு திடீரென வாந்தி வருவதுபோல் தோன்றியது. இதனால் அவர் பஸ் படிக்கட்டில் நின்றவாறு முகத்தைக் கழுவினார். அப்போது எதிர்பாராதவிதமாக தனிகாபடிக்கட்டிலில் இருந்து தவறி ரோட்டில் விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர்.பின்னர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தனிகாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.