கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில் உள்ள பள்ளிவாசல் கட்டிட விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. கட்டிடத்தின் அருகே மின்கம்பி செல்கிறது. இதனை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் செட்டிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் (37), கட்டுமான கம்பிகளை வளைத்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஒரு கம்பியை வளைத்த போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள மின் கம்பியில் மின்சாரம் தாக்கி கிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.