கோவை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோர்ட்டில் போலியான ஆவணங்களை கொடுத்த பெண் புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். அவர் மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், செந்தில்குமார் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். செந்தில்குமாருக்கு அன்னூர் அருகே உள்ள புகளூர்வலசையைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றும் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவி ஆகியோர் ஜாமீன் ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். ஆவணங்களை நீதிபதிகள் சரிபார்த்தபோது அவை போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை அறிந்த நீதிபதி அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலி ஆவணங்களை தயாரித்து தாக்கல் செய்த பழனிச்சாமி, தேவி ஆகியோர் மீது கோர்ட்டு உதவியாளர் தங்கமணி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் பழனிச்சாமி, தேவி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அரசிடம் பொய்யான ஆவணங்களைக் கொடுத்து ஜாமீன் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த அனுஷ்யா தேவி என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.