நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தை பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக்குழு தலைவர் சுலைமான், மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் பரீத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில்நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசிவரும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.



கல்யாணராமனை பாதுகாத்து வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...