மேட்டுப்பாளையம் ஆர்பாட்டம்: இந்து முன்னணியினர் அதில் கலந்து கொள்ளவே இல்லை; ஆனால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது - காடேஸ்வரா சுப்பிரமணியம் மனு

கோவை: தொடர்ந்து இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும், முறையான விசாரணை மேற்கொண்டு உண்மைத் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளருக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மனு அனுப்பியுள்ளார்.


கோவை: தொடர்ந்து இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும், முறையான விசாரணை மேற்கொண்டு உண்மைத் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி மற்றும் உள்துறை

செயலாளருக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவின் விவரம் வருமாறு:- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு இயக்கங்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உடமைக்கும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக பலகாலமாக இருந்து வருகிறார்கள். கடந்த 26ம் தேதி பாரதப் பிரதமர் மோடியை சித்தரித்து தெரு நாடகம் நடத்தி சில அமைப்புகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் நிகழ்வு நடத்தினர்.

இதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசிக் கொண்டிருந்த போது சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டத்திற்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேற்படி சம்பவம் முழுவதும் போலீசார் மற்றும் உளவுத் துறையால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்று நிலைமையை சீர் செய்ய காவல்துறையினர் முயன்றனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கல்யாணராமன், சதீஷ்குமார், சதீஷ், ஜெகநாதன், தீனா, ஆனந்த், செந்தில்குமார் செங்கோடன் மற்றும் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், வடக்கு மாவட்ட துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கும், இந்து முன்னணி இயக்கத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் நபர்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை பரிசீலித்து இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யும்படி கேட்டுக் கொள்வதாக, அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...