எங்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிய வேலை ஆட்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் - கோவை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை..!

கோவை: உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிய வேலை ஆட்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும், என்று ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிய வேலை ஆட்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும், என்று ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் துப்புறவு பொது பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி சுகாதார துப்புரவு பணியில் சுகாதாரம், துப்புறவு கார்டனர், மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு குடிநீர் விநியோகம், டிரைவர் கிளீனர்கள் என 3865 தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் தினக்கூலிகளாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களின் ஊதியம் வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் துப்புறவு பொது பணியாளர் சங்கம், ஜீவா சுகாதார தொழிலாளர், கோயம்புத்தூர் லேபர் யூனியன், ஏஐடியுசி, ஜனசக்தி லேபர் யூனியன் ஆகிய சங்கங்கள் கூட்டமைப்பாக இணைந்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் தொழில் தாவா வழக்கு தாக்கல் செய்து நடத்தி வந்தது.

இதனிடையே, சுகாதார பிரிவில் 530 காலியிடங்கள் உள்ள நிலையில், வேலைக்கு ஆட்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எடுக்கப்படும், என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து, ஒப்பந்த தொழிலாளர் இருக்கும் போது அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மாநகராட்சி புதிய வேலை ஆட்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அதில், மாநகராட்சி சார்பாக 530 காலி இடங்களுக்கு நேர்காணல் அதாவது இன்டர்வியூ நடத்தலாம், ஆனால் பணி நியமனம் செய்யக்கூடாது, என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கோவை மாநகராட்சியில் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றும், எளிய மக்களுக்கு கிடைத்த ஒரு இடைக்கால வெற்றி என்றே கருதப்படுகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கான உரிய சலுகைகளை வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...