கோவை: மதம் சார்ந்த அரசியலை பா.ஜ.க செய்யாது; கோவை "மோடி முகாம்" நிகழ்ச்சியில் அண்ணாமலை பேட்டி.
கோவை: "மதம் சார்ந்தஅரசியலை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் செய்யாது எனவும் வேண்டுமென்றே திட்டம் போட்டு தேர்தல் களத்தில் வன்முறையை தூண்டும் எண்ணத்தின் வெளிபாடு தான் சமீபத்திய மேட்டுப்பாளையம் சம்பவம்" என்று கோவையில் பாஜகவின் மாநில துணை தலைவர், அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை ராஜ வீதி பகுதியில் பாஜக மக்கள் சேவை மையத்தின் சார்பில் மோடி முகாம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில துணை தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டிலும் வரும் 21ம் தேதி வரை மோடி முகாம் நடைபெறும். பிரதமரின் திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு போய் சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறிய அவர், இதில் 5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் எடுத்து தரப்படும், என்றார்.

10 வயதுக்குள் பெண் குழந்தைகள் இருந்தால், செல்வமகள் திட்டத்தில் இணைக்கலாம். இந்த முகாமின், ஒரு பகுதியாக கண், காது பரிசோதனை மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தகுந்த அடையாள அட்டை இருந்தால் அவர்களுக்கு அரசாங்க உதவி உபகரணங்கள் உதவியையும் செய்து தரப்படும். விபத்து, ஆயுள் காப்பீடு போன்ற சேவைகளும் இம்முகாமில் செய்து தரப்படும் என்றார்.
பின்னர், பேசிய கட்சியின் மாநில துணைத் தலைவர், அண்ணாமலை, மோடியின் 191 வது திட்டம் நடைமுறையில் உள்ளது. தன்னார்வலர்கள், இதில் சேரும் போது பிரதமரின் திட்டங்கள் 100 சதவீதம் மக்களை சென்றடையும்,
அரசியலை தாண்டி பிரதமரின் திட்டங்கள் மக்களிடம் சேர வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

26ம் தேதியன்று இரண்டு அமைப்புகள் போட்ட "டிராமா" என்பது கருத்து சுதந்திரத்தை தாண்டி தான் இருந்தது. பாரத பிரதமரை அவர்கள் காட்டிய விதம் கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து பாஜக நடத்திய போராட்டம் நடைபெற்றதில் கலவரம் நிகழ்ந்துள்ளது. இதை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனபது தான் எங்கள் கோரிக்கை, என்றார்.
பாஜக மதம் சார்ந்த அரசியல் செய்யாது. கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம், இந்து முஸ்லீம் ஒற்றுமையை பற்றி பேசியதில் என்ன தவறு உள்ளது?. என்னை பொறுத்தவரை திட்டம் போட்டு தேர்தல் களத்தில் வன்முறையை தூண்டவே கொடைக்கானல் மற்றும் மேட்டுப்பாளையம் சம்பவம் நடைபெற்றுள்ளது, என்று தெரிவித்தார்.