கோவை: கையுறை விற்று ஒரு கோடி மோசடி செய்த கோவை பெண் தொழிலதிபர் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். தரம் குறைந்த கையுறைகளை விற்று ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த பெண் தொழிலதிபர் ஜாஸ்மின் மனு இரண்டாவது முறையாக மீண்டும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையத்தில் புளு ஆர்ச் சிட்ஸ் என்ற கையுறை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குனர் கீதா அகர்வால், இயக்குனர் பாலாஜி. இவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கையுறையை விற்பனை செய்தனர்.
கையுறை தரமற்றதாக இருந்ததால் அவற்றை திருப்பி அனுப்பியதுடன் பணத்தை திருப்பித் தருமாறு தொண்டு நிறுவனம் கேட்டது. ஆனால், அவர்கள் பணத்தை திருப்பி தர மறுத்ததால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து கீதா அகர்வால், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.
கீதா அகர்வால் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சக்திவேல் ஜாமீன் மீண்டும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.