கோவை: கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து மீண்டும் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை டீன் நிர்மலா கூறினார்.

இதுகுறித்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:- கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக 665 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் கடந்த மாதம் வரை பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் 100-க்கும் குறைவான நோயாளிகள் உள்ளனர். கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இ.எஸ்.ஐ. கார்டு வைத்துள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் உள்நோயாளிகள் சிகிச்சை துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.