கோவையில், ரூ. 25 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டவர் கைது!

கோவை: 25 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: 25 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் மணி. முன்னாள் ராணுவ வீரரான இவரும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரைச் சேர்ந்த மஞ்சுநாதா என்பவரும் இணைந்து பிரபல சிமெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தருவதாக ஆசைவார்த்தை காட்டி விளம்பரம் செய்துள்ளனர்.

இதை நம்பி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். கோவை போத்தனூரைச் சேர்ந்த லாரா விண்ணரசி என்பவர் பல தவணைகளாக ரூபாய் 5.75 லட்சம் வரை செலுத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கு லாபத் தொகையை திருப்பித் தரவில்லை. இதையடுத்து அவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, மணி, மஞ்சுநாதா ஆகிய இருவரும் ரூ. 25 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரிந்தது. இதையடுத்து கடந்தாண்டு மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த மஞ்சுநாதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...