நீலகிரி: குன்னூர் மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள வங்கியின் ஏடிஎம்மில் பணிபுரியும் காவலாளியிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்னூர் மவுண்ட்ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர் நட்ராஜ். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்த போது, அவருக்கு தெரியாமல் அவர் கழற்றி வைத்திருந்த ஜர்க்கினில் இருந்து செல்போன் மற்றும் அதிலிருந்த நூறு ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் ஒருவர் திருடிச் சென்றனர்.
இது குறித்து குன்னூர் காவல் நிலையத்தில் நட்ராஜ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சூர்யா(17) காளியப்பன்(16) மற்றும் கௌதம்(19) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். அவர்கள் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.
இதில் சூர்யா மற்றும் காளியப்பன் ஆகியோர் சிறுவர்கள் என்பதால் இவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.