உடுமலையில் புதிதாக துவங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரியில் விரைவில் வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: உடுமலையில் புதிதாக துவங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில், இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: உடுமலையில் புதிதாக துவங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில், இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வக வகுப்பறை கட்டிடத்தை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக பறவை காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறினார்.

உடுமலைப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில், தற்போது 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சுற்றில் மீதமுள்ள 7 இடங்களும் நிரப்பப்பட்டு, விரைவில் வகுப்புகள் துவங்கப்படும் என்றும், யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

மேலும், கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை மற்றும் கறிக்கோழி சிறந்த உணவாக இருந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. அதிகளவில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு முட்டை மற்றும் கோழிகளை அனுப்பி வருகிறோம். பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, கறிக்கோழிகளை உணவாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...