பொள்ளாச்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட மலைக் கிளிகளை விற்ற 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா என்ற மலைக் கிளிகளை விற்ற 2 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா என்ற மலைக் கிளிகளை விற்ற 2 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா என்ற மலைவாழ் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆரோக்கியராஜ்சேவியர் உத்தரவின்பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர்அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வனத்துறையால் தடைசெய்யப்பட்ட 9 கிளிகளை அனீஸ் மோகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் விற்பனைக்காக வைத்திருந்தனர். அவர்களை உடனடியாக பொள்ளாச்சி வன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து கிளிகளைப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுபோன்ற தடை செய்யப்பட்ட வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் வீடுகளில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், மீறி யாராவது விற்றால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...