சசிகலா விவகாரம் அ.தி.மு.க. சம்பந்தப்பட்டது: வானதி சீனிவாசன் சொல்கிறார்!

கோவை: சசிகலா விவகாரம் அ.தி.மு.க. சம்பந்தப்பட்டது என்று பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


கோவை: சசிகலா விவகாரம் அ.தி.மு.க. சம்பந்தப்பட்டது என்று பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சக்சம் அமைப்பும் இணைந்து மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோடி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை ராம்நகரில் கோவையில் மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முதல் தவணை கட்டி இணைப்பது மற்றும் இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இவற்றைப் பார்வையிட்ட பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், `மக்களுக்கான தேவையறிந்து சேவைகளைச் செய்வதிலேயே கோவை மக்கள் சேவை மையம் முதன்மையான நோக்கம் கொண்டிருக்கிறது' என்றார். அப்போது சசிகலா விடுதலை குறித்து கேட்டபோது, சசிகலாவின் வருகை என்பது அ.தி.மு.க.வுக்கும், அவருக்குமான உறவு சம்பந்தப்பட்டது என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை வகிப்பதாகவும் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திக்க உள்ளோம். மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை அமைப்பு தாக்குதல் நடத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது. காவல்துறை அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...