கல்யாணராமன் கைதுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்: உடனடியாக விடுதலை செய்ய அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

கோவை: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கல்யாணராமனை விடுதலை செய்யுமாறு அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கல்யாணராமனை விடுதலை செய்யுமாறு அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தி எஸ்.டி.பி.ஐ. மற்றும்‌ பி.எஃப்.ஐ. சார்பில் பேசியதைக் கண்டித்தும், சுவரொட்டிகள்‌ ஒட்டப்பட்டதைக் கண்டித்தும்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்துகொண்டு பேசினார்.

கல்யாணராமன் பேச ஆரம்பித்தபோது கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கண்ட இஸ்லாமிய‌ அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து பிரச்சினை செய்துள்ளனர். ஆனால் காவல்துறை அவர்களை அகற்றவோ அல்லது கைது செய்யவோ யோசிக்கவில்லை.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்து ஒரு இல்லத்தில் உணவருந்திக் கொண்டிருந்த கல்யாணராமனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அனுமதி பெறப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறியதுடன் பிரதமர் மோடியை இழிவாக பதிவிட்ட இஸ்லாமியர்களை கைது செய்யாத காவல்துறைகல்யாணராமனை மட்டும் கைது செய்ததில் இருக்கும் மர்மம் என்ன?

கல்யாணராமனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன். போராட்டத்தைத் தூண்டாதீர்கள், இந்து விரோத செயல்களுக்கு துணை போகாதீர்கள். பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், முன்னாள் நகரமன்ற தலைவர் சதீஷ் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ள தமிழக காவல்துறையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள இந்து தலைவர்கள் கல்யாணராமன், சதீஷ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுக்க இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஜனநாயக வழியில் அறப் போராட்டங்கள் நடைபெறும்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...