கோவை: கிறிஸ்தவர்களுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர், இன்று நடந்த குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் மனு அளித்தனர்.

பின்னர், அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிஷப் சகாயராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பல மிஷனரிகள், மக்களின் நலவாழ்வுக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்கு நலவாரியங்கள் அமைத்து நல்லது செய்துள்ளது, தமிழக அரசு. ஏற்கனவேே, இஸ்லாமிய மக்களுக்கு உலமாக்கள் நல வாரியமும், இந்துக்களுக்கு பூசாரிகள் நலவாரியமும் உள்ளது.

அதேபோல், கிறிஸ்தவர்களுக்கு ஊழியர்கள் நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். இதை அமைத்து கொடுத்தால் வரும் காலத்திலும் அரசுக்கு உறுதுணையாக நிற்போம், இவ்வாறு அவர் கூறினார்.