கோவை: கோவை ஐ.எம்.ஏ. சார்பில் மிக்சோபதிக்கு எதிரான 14 நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடங்கியது.
கோவை: கோவை ஐ.எம்.ஏ. சார்பில் மிக்சோபதிக்கு எதிரான 14 நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடங்கியது.
அலோபதி மருத்துவர்கள் அல்லாத சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவம் படித்தவர்களும் 56 வகையான அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவத்துடன் அலோபதி மருத்துவமும் இணைந்து மிக்சோபதி என்ற மருத்துவமுறை மூலம் சிகிச்சை அளிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை கூறியது. இந்த புதிய மருத்துவ முறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று கூறி அந்த சட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மிக்சோபதிக்கு எதிரான இந்திய மருத்துவ சங்கத்தின் இந்தப் போராட்டம் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இன்று தொடங்கும் இந்தப் போராட்டம் வரும் 14-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் மகளிர் பிரிவு மருத்துவர்கள் சங்கம் மற்றும் மாணவர் பிரிவைத் தவிர ஐ.டி.ஏவும் உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு இந்திய பல் மருத்துவ சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.