நபிகள் குறித்து பாஜக சர்ச்சை பேச்சு: கோவை, ஊட்டி, மேட்டுப்பாளையத்தில் விடிய விடிய பதட்டம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் உயர்வாக கருதும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதாக கூறி இஸ்லாமிய அமைப்பினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நேற்று இரவு முற்றுகையிட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் உயர்வாக கருதும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதாக கூறி இஸ்லாமிய அமைப்பினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நேற்று இரவு முற்றுகையிட்டனர்.

பாஜக கூட்டத்தில், இஸ்லாமிய இறை தூதர் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை கண்டித்து மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் கூட்டுறவு காலனியில் பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் உமா சங்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசியபோது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.

அப்போது, போலீசாரின் பாதுகாப்பையும் மீறி மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், வெற்றிச்செல்வி என்ற பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத பாரதிய ஜனதா கட்சியினர் அந்த மர்ம நபர்களை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் கல்வீச்சு, பதட்டமான சூழ்நிலை..!

உடனே, போலீசார் தடுத்து நிறுத்தி கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பதட்டமான சூழ்நிலை நிலவியதால் மேட்டுப்பாளையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கல்வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை

இதற்கிடையில், பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசியதாக கூறி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கல்யாணராமனை கைது செய்யக்கோரி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை நேற்று இரவு திடீரென முற்றுகையிட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்பினரை விடுதலை செய்யக் கோரி போலீஸ் சூப்பிரண்டு முன்பு உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் (சட்டம், ஒழுங்கு)!சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

த.மு.மு.க சார்பில் உக்கடம் சாலை மறியல்..!

இதனிடையே, த.மு.மு.க சார்பில் உக்கடம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாலையில் அமர்ந்தபடி பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊட்டியில் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டம், கைது..!

முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து கோவை உக்கடம், கரும்புக்கடை. குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். ஊட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர். அவர்களை விடுவிக்க கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஊட்டி சேரிங் கிராசில் மறியலில் ஈடுபட்டனர். அதில் 136 பேரை போலீசார் கைது செய்தனர். அதனால் இரவு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தால் கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...