கோவை: கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இணையதளக் குற்றங்களை விசாரிக்க சைபர் கிரைம் போலீஸ் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

கோவை மாநகரில் சைபர் குற்றங்கள் என்று அழைக்கப்படும் இணையதளக் குற்றங்களை விசாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனால் கோவை மாநகரில் சைபர் குற்றங்கள் நடந்தால், அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில்தான் புகார் செய்ய வேண்டும். அவர்கள் அந்தப் புகார்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
தற்போது கோவை புறநகரில் நடக்கும் இணையதளக் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கான சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு உத்தரவு வந்ததும் இந்த போலீஸ் நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும். கோவை புறநகரில் சைபர் குற்றங்கள் குறித்து பெறப்படும் புகார்கள் இங்கு வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.