கோவையில், கத்தியுடன் சுற்றித் திரிந்த கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது!

கோவை: கோவையில், கத்தியுடன் சுற்றித் திரிந்த கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அறிவொளி நகர் பிரிவில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் செல்ல முயன்றனர்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் அவர்கள் 3 பேரிடமும் கத்தி இருந்தது தெரியவந்தது.

கத்தியுடன் சுற்றித்திரிந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டி (வயது 23), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24), கோவை சாய்பாபா காலனி கே.கே.நகரைச் சேர்ந்த கமலேஷ் (வயது 22) என்பது தெரியவந்தஹ்டு. மேலும் அவர்கள் மூன்று பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களது கூட்டாளிகளான ரமேஷ், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.இவர்கள் 3 பேரும் எதற்காக கத்தியுடன் சுற்றித் திரிந்தார்கள்என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...