நபிகளை இழிவுப்படுத்திய பேசிய பிஜேபி கல்யாணராமன் விவகாரம்: கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்..!

கோவை: பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.



கோவை: பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கல்யாணராமன், மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்வில் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் இழிவு படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு, தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கல்யாண ராமனுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் நேற்று இரவு சுமார் 9 மணிக்கு மேல் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில், தமுமுகவினர் உக்கடம் பகுதியில் சாலை மறியலிலும், பி.எஃப்.ஐ.,யினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கல்யாணராமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கண்டன செய்தி வெளியிட்டுள்ள, கோவை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா:

இஸ்லாமியர்களின் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறைதூதரை அவமதித்து அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் தொடர்ந்து மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் BJPயை சேர்ந்த கல்யாணராமனை எதிர்த்து முழக்கமிட்ட முஸ்லிம்களை கைது செய்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 31.01.2021 BJP சார்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்யாணராமன் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களைப் பற்றியும், ஷஹாபாக்களையும், ஷஹாபிய பெண்மணிகளை பற்றியும், தொடர்ந்து அவமரியாதையாக பேசியபொழுது எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முழக்கமிட்டு எதிர்ப்பை தெரிவித்த இஸ்லாமியர்களை கைது செய்த காவல்துறையை வன்மையாக கண்டிப்பதோடு, பாசிச அத்துமீறல்களுக்கு அடிபணித்து இஸ்லாமியர்கள் மீது காழ்புணர்வுடன் செயல் படுவதை நிறுத்த வேண்டும்.

BJPயை சேர்ந்த கல்யாணராமனை உடனடியாக கைது செய்து, கைது செய்த இஸ்லாமியர்களை உடனே விடுதலை செய் வேண்டும்,வ்என்று தமிழக காவல்துறையை கேட்டுக்கொள்கின்றேன், என்று அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...