கோவை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தின்போது விவசாயிகளைத் தாக்கிய மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் தி.மு.க. சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தின்போது விவசாயிகளைத் தாக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் அறவழியில் போராடிய விவசாயிகள்மீது பொய்வழக்கு பதிவு செய்த தமிழக அரசைக் கண்டித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

3,000-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களுடன் கலந்துகொண்ட இந்தப் பேரணி பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் துவங்கி பன்னிமடை, சின்னத்தடாகம், கணுவாய், துடியலூர், இடிகரை, அத்திப்பாளையம், கீரணத்தம், கொண்டையம்பாளையம் வழியாக வையம்பாளையம் கிராமத்தில் உள்ள தமிழக விவசாயிகளின் பாதுகாவலர் சி.நாராயணசாமி நாயுடு நினைவு மணி மண்டபம் வரை சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து பேரணி நிறைவடைந்தது.

கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மாவட்ட தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பகுதி - ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பேரூர், வட்ட, கிளை கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.