கோவையில் கல்லுக்குழி நீரில் மூழ்கி சிறுவன் சாவு

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் தியாகு (40), எலக்ட்ரீசியன். இவருக்கு ராம குரு (15), ஸ்ரீ சங்கர் என்ற மகன்கள் இருந்தனர். ராமகுரு 10-ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கர் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் தியாகு (40), எலக்ட்ரீசியன். இவருக்கு ராம குரு (15), ஸ்ரீ சங்கர் என்ற மகன்கள் இருந்தனர். ராமகுரு 10-ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கர் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம், ஸ்ரீ சங்கர் தனது அண்ணனிடம் குளிக்கப் போகலாம் வா என கூறி அழைத்துள்ளார். அவன் வேண்டாம் என்று சொல்லவே, ஸ்ரீசங்கர் தொடர்ந்து அழைத்ததால் அதே பகுதியில் இருந்த கல்லுக்குழி நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ரெண்டு பேரும் குளித்தனர். தம்பியிடம் உனக்கு நீச்சல் தெரியாது ஆழமான இடத்திற்கு போய் விடாதே கரையில் நின்று குளித்துவிட்டு வா என்று சங்கரின் அண்ணன் கூறியுள்ளார், இருந்தபோதும் ஸ்ரீ சங்கர் நீரில் விளையாடிக்கொண்டடே ஆழமான இடத்திற்குப் போய் விட்டார்.

பின்னர், நீரில் மூழ்கக் உதவி கேட்டு கூச்சலிட்டான். ஆனால், அங்கிருந்த சிறுவர்களால் ஸ்ரீசங்கரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தனர். அங்கே வந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஸ்ரீ சங்கர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

மலுமிச்சம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...